Exit Polls Result 2024 live update: வெளிவந்தன எக்சிட் போல் முடிவுகள்... யார், எங்கு வெற்றி பெறுகிறார்கள்? முழு விவரம் இதோ (2024)

  • Tamil News
  • Live Updates

Lok Sabha Election Exit Polls Result 2024: 2024 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டு இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.ÂÂ

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 1, 2024, 06:31 PM IST

Trending Photos

9

Indian 2

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..

9

Mercury transit

நவகிரகங்களின் இளவரசரின் ராசி மாற்றத்தால், முடி சூடப் போகும் ராசிகள் இவைதான்...

8

Health Benefits

Guava Benefits: கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

9

Mars Transit

இன்று செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... கொடிகட்டி பறப்பார்கள்

Exit Polls Result 2024 live update: வெளிவந்தன எக்சிட் போல் முடிவுகள்... யார், எங்கு வெற்றி பெறுகிறார்கள்? முழு விவரம் இதோ (5)

Live Blog

Lok Sabha Election Exit Polls Result 2024: 2024 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டு இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கோடையில் வெப்பம் அதிகரித்தாலும், மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். 7-ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. தரவுகள் தொகுக்கப்பட்ட பிறகு இறுதி வாக்காளர் எண்ணிக்கை வெளியிடப்படும்.Â

1 June, 2024

  • 18:59 PM

    R.Bharat-Matrize கருத்துக்கணிப்பு முடிவுகள்: டெல்லிÂ

    - டெல்லியில் பாஜக 5-7 இடங்கள்Â
    - காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சி கூட்டணி 0-2 இடங்கள்Â

  • 18:55 PM

    ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகள்: கேரளா

    இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் கேரளாவில், இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போலின் படி,Â

    - பாஜக 2-3 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி இந்த எண்ணிக்கை உண்மையானால், அது தென் மாநில பாஜகவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

    - காங்கிரஸ் தலைமையிலான UDF 17-18 இடங்களைப் பெறும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    - முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் எல்.டி.எப், 0-1 இடத்துக்கும் இடையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • 18:53 PM

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக: சில சுவாரஸ்கியமான அம்சங்கள்:

    - தென் தமிழகத்தில் கணிசமான அளவு பாஜகவிற்கு வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பு.
    - தென்னிந்தியாவில் மட்டும் 100 தொகுதிகளுக்கு மேலாக கைப்பற்றுகிறது இந்திய கூட்டணி
    - மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் கணிசமான அளவு தொகுதிகளை கைப்பற்றுகிறது இந்தியா கூட்டணி
    - அதிமுகவிற்கு மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற தென் தமிழக தொகுதிகளில் பின்னடைவு இருப்பினும் பாஜகவின் வாக்குகளை வீட சற்று அதிகம் பெற வாய்ப்பு
    - ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி
    - மீண்டும் விளவங்கோடு வோடு சட்டமன்ற தொகுதியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்

  • 18:50 PM

    இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடுவுகள்:

    கேரளா-20

    இந்தியா கூட்டணி: 13-14
    சிபிஐ: 1-5
    எண்டிஏ: 2-3

  • 18:46 PM

    கர்நாடகாவின் கிங் யார்?

    இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, கர்நாடகாவில்Â
    - பாஜக 23-25 ​​மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றும்.Â
    - தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் பாஜகவுடன் இணைந்துள்ள ஜேடிஎஸ் 2-3 இடங்களை கைப்பற்றும்
    - மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் வெறும் 3-5 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம்.Â

  • 18:45 PM

    Axis My India Exit Poll Results: தமிழ்நாட்டில் இந்தியா பிளாக் ஸ்வீப்?

    இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் 2024 -இன் படி, தமிழ்வாட்டில், 39 மக்களவைத் தொகுதிகளில்

    - ஆளும் திமுக 20-22 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    - கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6-8 இடங்களை கைப்பற்றும்.

    - தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக, 1 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

  • 18:35 PM

    Matrize Exit PollÂ

    எண்டிஏ - 353-368
    இந்தியா கூட்டணி - 118-133
    பிற - 43-48

  • 18:17 PM

    கருத்துக்கணிப்பு முடிவுகள்:

    PMARQ EXIT Poll:

    எண்டிஏ - 359
    இந்தியா கூட்டணி - 154
    பிற - 30

  • 18:14 PM

    2024 மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    7-ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. தரவுகள் தொகுக்கப்பட்ட பிறகு இறுதி வாக்காளர் எண்ணிக்கை வெளியிடப்படும். இன்று மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 58.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் விரைவில் வெளியாகும்.

  • 18:05 PM

    நாங்கள் 295+ இடங்களில் வெற்றி பெறுவோம்:Âதேஜஸ்வி யாதவ்

    இன்னும் சில நிமிடங்களில் எக்சிட் போல் முடிவுகள் வரவுள்ள நிலையில், பிஹார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், "பாஜகவின் 400 பார் படம் முதல் கட்ட வாக்குப்பதிவிலேயே தோல்வியடைந்தது. நாங்கள் 295+ இடங்களில் வெற்றி பெறுவோம். இந்தியா (கூட்டணி) வெற்றி பெறுகிறது." என்று கூறியுள்ளார்.Â

  • 17:34 PM

    பாஜக? காங்கிரஸா? யாருக்கு வெற்றி? யார் முதல்வர்?

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அக்கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களது பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் எனத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வருகின்றனர். இன்று மாலை வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரவுள்ள எக்சிட் போல் முடிவுகள் ஜூன் 4-க்குக்கான முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.Â

  • 16:51 PM

    கருத்துக்கணிப்பு விவாதங்களில் கலந்துகொள்வோம்: காங்கிரஸ்

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, இன்று மாலை தொலைக்காட்சியில் நடைபெறும் கருத்துக்கணிப்பு விவாதங்களில் அனைத்து இந்தியா கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்வது என்று ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    INDIA parties met and decided to expose the bjp and its ecosystem on the prefixed exit polls.
    After considering factors for and against participating in the exit polls, it has been decided by consensus that all the INDIA parties will participate in the exit poll debates on…

    — Pawan Khera (@Pawankhera) June 1, 2024

    Â

  • 16:31 PM

    Exit Polls Result 2024 Live Update: எக்ஸிட் போல் கணிப்புக்கு முன்னதாக இந்தியா கூட்டணி மீட்டிங்

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் இந்திய கூட்டணிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்கள்: மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் (INC), அகிலேஷ் யாதவ் (SP), சரத் பவார் மற்றும் ஜிதேந்திர அவாத் (NCP), அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சாதா (AAP), டிஆர் பாலு (DMK), தேஜஸ்வி யாதவ் மற்றும் சஞ்சய் யாதவ் (RJD), சம்பை சோரன் மற்றும் கல்பனா சோரன் (JMM), ஃபரூக் அப்துல்லா (J&K NC), டி.ராஜா (CPI), சீதாராம் யெச்சூரி (CPIM), அனில் தேசாய். சிவசேனா (UBT), திபாங்கர் பட்டாச்சார்யா (CPI(ML), மற்றும் முகேஷ் சஹானி (VIP).

  • 16:10 PM

    Exit Poll தவறுவதற்கு வாய்ப்பு இருக்கா?

    கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தவறுவதற்கும் வாய்ப்பிருக்கின்றன. அப்படி கணிப்புகள் தவறுவதற்கு பல்வேறு காரணிகளும் உள்ளன. குறிப்பாக, கருத்துக்கணிப்புகளின் போது வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை நேர்மையாக அளிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். இதுவும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புள்ளது. கருத்துக்கணிப்பு செய்வர்களை ஏமாற்றும் நோக்கில் கூட சிலர் கருத்து தெரிவிக்கலாம். ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூக மக்களிடம் தங்களின் முடிவை வெளிப்படையாக தெரிவிக்க அச்சப்படலாம், இதுவும் முடிவுகளில் மாற்றத்தை தரும்.Â

  • 15:33 PM

    நாங்கதாங்க ஆட்சி அமைப்போம்: காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா

    இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புவதால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புவதை உணர்ந்தோம்... இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்

  • 15:03 PM

    Exit Poll என்றால் என்ன?,Âஇது எப்படி நடத்தப்படுகிறது?

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை Opinion Poll என்றழைப்பார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை Exit Poll என்றழைப்பார்கள். அதாவது, வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. இருப்பினும், Exit Poll முடிவுகள் எப்போதும் சரியாகவும் துல்லியமாகவும் இருக்காது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.Â

  • 14:32 PM

    கருத்துக்கணிப்புகளின் கணிப்பு 2014, 2019 -இல் எவ்வளவு துல்லியமாக இருந்தது?

    2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் NDA 306 வாக்குகளுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்தன. எனினும் அந்தக் கூட்டணி 353 இடங்களை வென்றது. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ 93 இடங்களைப் பெற்றது.Â2019 கருத்துக் கணிப்பில், இந்த இரண்டு கணிப்புகள் துல்லியமாக இருந்தன
    - இந்தியா டுடே-ஆக்சிஸ் 352 இடங்களை என்டிஏவுக்கு வழங்கியதுÂ
    - நியூஸ் 24-டுடேவின் சாணக்யா 350 இடங்கள் கிடைக்கும் என கணித்தது.

    2014 இல், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் NDA க்கு 283 இடங்களையும், UPA 105 இடங்களையும் அளித்தன. எனினும், NDA 336 இடங்களை வென்றது, UPA 60 இடங்களைப் பெற்றது. 2014 பொதுத் தேர்தலில், NDA க்கு 340 இடங்கள் கிடைக்கும் என்று நியூஸ் 24-சாணக்யா மட்டுமே கணித்தது.Â

  • 14:04 PM

    Exit Polls முடிவுகளை எங்கு பார்ப்பது?

    காட்சி ஊடகங்களில் இன்று மாலை 6.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடும். அதன் சமூக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், யூ-ட்யூப்பிலும் இவை ஸ்ட்ரீம் செய்யப்படும். நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்தின் இணையத்தளம், யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிலும் நீங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.Â

  • 13:58 PM

    எத்தனை மணிக்கு Exit Poll முடிவுகள் வரும்...?

    கடந்த ஏப். 19ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரைÂதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எனப்படும் Exit Poll முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. எனவே, இன்று நடைபெற்று வரும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், மாலை 6.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும்.Â

  • 13:24 PM

    எக்சிட் போல்: ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது

    இன்று மாலை வெளிவரவுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்காக நாடே ஆவலுடன் காத்திருக்கின்றது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.Â

Exit pollsLok Sabha electionstn lok sabha electionsBJPCongress

Exit Polls Result 2024 live update: வெளிவந்தன எக்சிட் போல் முடிவுகள்... யார், எங்கு வெற்றி பெறுகிறார்கள்? முழு விவரம் இதோ (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Prof. An Powlowski

Last Updated:

Views: 5612

Rating: 4.3 / 5 (64 voted)

Reviews: 87% of readers found this page helpful

Author information

Name: Prof. An Powlowski

Birthday: 1992-09-29

Address: Apt. 994 8891 Orval Hill, Brittnyburgh, AZ 41023-0398

Phone: +26417467956738

Job: District Marketing Strategist

Hobby: Embroidery, Bodybuilding, Motor sports, Amateur radio, Wood carving, Whittling, Air sports

Introduction: My name is Prof. An Powlowski, I am a charming, helpful, attractive, good, graceful, thoughtful, vast person who loves writing and wants to share my knowledge and understanding with you.